உள்ளடக்கத்துக்குச் செல்

ரோகிணி பாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரு
ரோகிணி பாட்
தாய்மொழியில் பெயர்रोहिणी भाटे
பிறப்பு(1924-11-14)14 நவம்பர் 1924
இந்தியா, பீகார், பாட்னா.[1]
இறப்பு10 அக்டோபர் 2008(2008-10-10) (அகவை 83)
மகாராட்டிரம், புனே[1]
தேசியம்இந்தியா
குடியுரிமைஇந்தியர்
கல்விஇந்திய செவ்வியல் நடனம், இந்துஸ்தானி இசை
படித்த கல்வி நிறுவனங்கள்பெர்குசன் கல்லூரி
பணிசெவ்வியல் நடனக் கலைஞர், நடன அமைப்பாளர், எழுத்தாளர், ஆய்வாளர்
அமைப்பு(கள்)நிருத்யபாரதி கதக் நடன அகாடமி
பாணிகதக்
விருதுகள்சங்கீத நாடக அகாதமி விருது
(அனைத்தையும் காண)

ரோகினி பாட் ( மராத்தி : रोहिणी भाटे) (14 நவம்பர் 1924 - 10 அக்டோபர் 2008) [2] என்பவர் இந்தியாவின் மிக மூத்த கதக் நடனக் கலைஞர்களில் ஒருவர் ஆவார். இவர் ஒரு கலைஞராக, ஆசிரியராக, எழுத்தாளராக, ஆராய்ச்சியாளராக, இந்திய செவ்வியல் நடன விமர்சகர் என பன்முகத்தன்மைக் கொண்டவர். [3] இவரது தொழில் வாழ்க்கையில், சங்கீத நாடக அகாதமி விருது, மற்றும் காளிதாஸ் சம்மன் விருது போன்ற பல அங்கீகாரங்களுடன் விருதுகள் வழங்கப்பட்டன. [1]

ரோகினி ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ கரானாக்களில் கதக் பயின்றார். [4] இவர் நடன அமைப்புகளில் ஒரு பெரிய சொல்வங்கியை உருவாக்கினார். அங்கு இவர் அபிநயத்துக்கு செய்முறை சார்ந்த பகுப்பாய்வு மற்றும் புதுமையான அணுகுமுறைகளை பயன்படுத்தினார். [5] இந்துஸ்தானி செவ்வியல் இசையில் இவருக்கு இருந்த அறிவு காரணமாக, இவர் தனது நடன படைப்புகளுக்கு அவ்வப்போது இசையமைத்தார். [1] விமர்சகர் சுனில் கோத்தாரி கூறுகையில், விஜய மேத்தா இயக்கிய சகுந்தலாவுக்கான இவரது நடன அமைப்பு குறிப்பிடத்தக்கது. காளிதாசரின் ருது சம்ஹாரம் மற்றும் இருக்கு வேதத்தைச் சேர்ந்த உஸ்பா சுக்தா போன்றவற்றிற்கு இவர் அமைத்த நடன அசைவுகள் நன்கு பாராட்டப்பட்டன.

ஆய்வுகள்

[தொகு]

பட் பீகாரின், பட்னாவில் பிறந்தார், ஆனால் இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை புனேவில் முடித்தார். [3] இவர் ஒரு நடுத்தர வர்க்க கர்ஹடே பிராமண குடும்பத்திலிருந்து வந்தவர். ரோஹினி ஆரம்பத்தில் குரு பார்வதி குமாரிடம் பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்றார். [6] இவர் 1946 இல் பெர்குசன் கல்லூரியில் கலைகளில் பட்டம் பெற்றார். [3] அதே ஆண்டு ஜெய்ப்பூர் கரானாவின் சோஹன்லாலிடம் கதக் கற்கத் தொடங்கினார். [4]

சிறிது காலத்திற்குப் பிறகு, இவர் பண்டிட் லச்சு மகாராஜின் வழிகாட்டுதலில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கதக்கில் நிபுணத்துவம் பெற்றார். மேலும் லக்னோ கரானாவைச் சேர்ந்த பண்டிட் மோகன்ராவ் கல்லியனிடம் [1] [4] பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றார்.

கேசவ்ராவ் போல் மற்றும் வசந்த்ராவ் தேஷ்பாண்டே, [1] ஆகியோரிடமிருந்து இந்துஸ்தானி இசையையும் கற்றுக் கொண்டார், மேலும் கதக்கில் முனைவர் பட்டம் பெற்றார். [3]

தொழில்

[தொகு]

இவர் தனது கற்றல், அறிவுத்திரம், புவியியல், போன்ற பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக, கதக்கில் சுதந்திரமாக பரிசோதனை முயற்சிகளைச் செய்ய தனது இசை மற்றும் அறிவுத்திரத்தைப் பயன்படுத்தினார். இவர் 1947 இல் புனேயில் நிருத்யபாரதி கதக் நடன அகாதமியை நிறுவினார். [1] கடந்த ஆறு தசாப்தங்களாக இவர் தனது அகாதமியிலிருந்து நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். [3] மகாராஷ்டிராவின் நடுத்தர வர்க்க குடும்பங்களிடையே கதக் நடனத்தை பிரபலப்படுத்தினார்.

1952 ஆம் ஆண்டில், இவர் இந்திய கலாச்சார தூதுக்குழுவின் உறுப்பினராக சீனத்திற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் இந்திய நடனங்கள் மற்றும் நாடகம் தொடர்பான பழைய நூல்களைப் படிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது. இது இவரது நுட்பத்தை செம்மைப்படுத்தியது. [4]

இவர் கைராகர் பல்கலைக்கழகக் குழுவில் பணியாற்றினார். மேலும் புனே பல்கலைக்கழகத்தின் லலித் கலா கேந்திரத்தில் கதக் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களைத் தயாரிப்பதற்கு வழிகாட்டினார். அங்கு இவர் வருகைதரு விரிவுரையாளராகவும் குருவாகவும் பணியாற்றினார். [1] ரோகினி டெல்லி கதக் கேந்திர மாணவர்களின் தேர்வாளராகவும் பணியாற்றினார், இருப்பினும் அதன் பாடத்திட்டத்தை இவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. [7]

ரோகிணி பாட் மராத்தியில் இவரின் சுயசரிதை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார், அவை இசடோரா டங்கனின் சுயசரிதையின் மொழிபெயர்பான மஜி நிருத்யசதானா, மற்றும் இசை மற்றும் நடனம் தொடர்பான சமஸ்கிருத கையேட்டின் திருத்தப்பட்ட பதிப்பான, கதயா தர்பனா தீபிகா என்று அழைக்கப்படும் அபிநய தர்பனா போன்ற நூல்கள் ஆகும். [1] இந்த புராதன புத்தகத்தை ரோகினி தனது பல நடன அமைப்பு மற்றும் படைப்புத் திட்டங்களுக்கு அடிப்படையாகக் கொண்டார். கதக் குறித்து ஏராளமான பக்கங்களை எழுதியுள்ளார். [4]

2002 ஆம் ஆண்டில், டைம் அண்ட் ஸ்பேஸ் என்ற ஜெர்மன் ஆவணப்படத்தில் இவர் இவராகவே தோன்றினார்.

மற்ற கலைஞர்களுடனான ஒத்துழைப்புக்காக, ரோகினி 1952 இல் புனேவுக்கு வந்தபோது இந்துஸ்தானி செவ்வியல் தபேலா வித்வான் சந்திரகாந்த் காமத்தை அறிமுகம் கொண்டார். இந்த இரு கலைஞர்களின் இசைக் கூட்டணி 15 ஆண்டுகள் நீடித்தது. [8] மேலும் ரோகினி கதக்கின் அபிநயா மற்றும் பரதநாட்டியத்தில் கலாநிதி நாராயணன் குறித்து ஒரு ஒப்பாய்வை மேற்கொண்டார். இவர் மற்றொரு முக்கியமான கதக் ஆளுமையான ரெபா வித்யார்த்தியின் நெருங்கிய நண்பராக இருந்தார்.

இறப்பு

[தொகு]

பாட் 2008 அக்டோபர் 10 அன்று தனது 83 வது வயதில் மகாராஷ்டிராவின் புனேவில் இறந்தார். அவரது மருமகளும் சீடருமான ஷாமா பாட் கருத்துப்படி, ரோகினி பாட் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடுக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்து, நோயால் உடலில் ஏற்பட்ட சிக்கல்களால் இறந்தார். [3]

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "Rohini Bhate passes away". The Hindu. 11 October 2008. பார்க்கப்பட்ட நாள் 19 January 2017.
  2. "Rohini Bhate". IMDb. பார்க்கப்பட்ட நாள் 20 January 2017.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "Noted Kathak exponent Rohini Bhate no more". The Times of India. 11 October 2008. பார்க்கப்பட்ட நாள் 19 January 2017.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Biographies of Kathak Gurus". Nad Sadhna: Institute for Indian Music & Research Center. Archived from the original on 17 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Jafa, Navina (4 August 2016). "Dissolving the dissonance". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 19 January 2017.
  6. {{cite book}}: Empty citation (help)
  7. {{cite book}}: Empty citation (help)
  8. "Tabla maestro Chandrakant Kamat passes away, leaves a void in city music scene". The Indian Express. 29 June 2010. பார்க்கப்பட்ட நாள் 19 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகிணி_பாட்&oldid=3788329" இலிருந்து மீள்விக்கப்பட்டது